கண்டியில் மீண்டும் வழமைக்கு திரும்பிய நீர் விநியோகம்!
Kandy
Sri Lanka
Weather
Water
By Kanooshiya
சீரற்ற காலநிலையால் கண்டி நகரில் தடைப்பட்டிருந்த நீர் விநியோகம் இன்று (02.12.2025) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
இதனை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக கண்டி நகரம் அதிக பாதிப்புக்களை சந்தித்திருந்தது.
மின்சாரம் துண்டிப்பு
அதன்படி, கண்டியில் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் மற்றும் மின்சாரம் என்பன தடைப்பட்டிருந்தன.
இதன்காரணமாக, கண்டி வாழ் மக்கள் பல அசௌகரியங்களுக்கு உட்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினத்தில் சில பிரதேசங்களுக்கு மின்சாரம் மீள வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (02.12.2025) நீர் விநியோகமும் மீள வழங்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |