சீனாவிடம் ஒருபோதும் அடிபணியமாட்டோம் -கர்சிக்கும் தாய்வான்
china
taiwan
Sai Ing-wen
By Jaso
தாய்வான் சீனாவுடன் இணைக்கப்படும் என்ற சீனாவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிப்பணியபோவதில்லை என தாய்வான் அதிபர் சாய் இங்-வென்(Sai Ing-wen) தெரிவித்துள்ளார்.
தாய்வான் தேசிய தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தாய்வான் செய்யும் சாதனைகள் அதிகரிக்க அதிகரிக்க, சீனாவிடமிருந்து வரும் அழுத்தமும் அதிகரிப்பதாக கூறினார்.
மேலும் சீனாவுடன் சுமுகமான உறவை விரும்புவதாக தெரிவித்த சாய் இங்-வென் அதேசமயம் சீனாவின் அழுத்தத்துக்கு தாய்வான் மக்கள் அடிபணிவார்கள் என்ற மாயை இருக்கக்கூடாது என்றார்.
தாய்வானை சீனாவுடன் இணைக்க அமைதியான முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியிருந்தமை குறி்பிடத்தக்கது.