செவ்வந்தியுடன் சிக்கிய நுகேகொட பேபியின் ஆயுதங்கள் மீட்பு!
நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பாதாள உலக குற்றவாளியான ஷமந்த சில்வா எனப்படும் நுகேகொட பேபியின் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணை
அதன்போது, நுகேகொட ஜம்புகஸ் முல்ல மாவத்தை பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு கைக்குண்டு மற்றும் பத்து தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு முன்பு, அந்த நிலத்தில் உள்ள வாழை மரத்தின் கீழ் வெடிகுண்டு மற்றும் தோட்டக்களை புதைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சந்தேக நபர் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கு மாகாண தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
