சீரற்ற காலநிலையால் தமிழர் பகுதியில் தொடர் பனிமூட்டம் - வாகன போக்குவரத்து பாதிப்பு (படங்கள்)
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை அங்கு கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது. இதனால் போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வங்களா விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடபகுதியில் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
தாழமுக்கம்
இரண்டு நாட்களுக்கு முன்னர் வங்காள விரிகுடாவில் இலங்கையின் நிலப்பரப்பை விட்டு வடக்கு திசையில் விலகிப்போன தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறி மீண்டும் கடலில் இருந்து தெற்கு, தென்மேற்கு திசையில் இலங்கையை ஊடறுத்துப் பயணிக்கக் கூடிய வகையில் தனது நகர்வை ஆரம்பித்துள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதேவேளை, தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி திருகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கே 160 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.