இந்த வாரத்தில் வெற்றியும் செல்வமும் சேர உள்ள ராசிகள்
வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
திங்கள் முதல் வெள்ளி வரை... இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
மேஷ ராசி
பண வரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தேவையற்ற வீண்செலவுகள் ஏற்படாது.
திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது.
கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவும்.
அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். அதன் காரணமாக மனதில் உற்சாகம் ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது
மிதுன ராசி
பரபரப்புடன் செயல்பட வேண்டிய வாரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
பொறுப்புகளை நிறைவேற்றுவதற் காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.
கடகராசி
பண வரவுக்குக் குறைவில்லை. உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி இருக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளை முடிக்க உதவி செய்வார்கள்.
வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். லாபமும் குறைவாகவே கிடைக்கும் என்பதால் மனதில் சஞ்சலம் ஏற்படும். புதிய முடிவுகள் எதுவும் இப்போது எடுக்கவேண்டாம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு போதிய அளவு பணம் கிடைப்பதால் சிரமம் எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வழக்கமான நிலையே நீடிக்கும்.
சிம்ம ராசி
குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனாலும், சிறு சிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படவும் அதன் காரணமாக மருத்துவச் செலவுகள் செய்யவும் நேரும்.
குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வழக்குகளைப் பொறுத்தவரை உங்களுக்குச் சாதகமான நிலையே இருக்கும்.
சகோதரர்கள் வகையில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. சக பணியாளர்கள் உங்களிடம் மரியாதையாக நடந்துகொள்வார்கள்.
கன்னிராசி
பண வரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமணம் விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் வழக்கறிஞர்களின் ஆலோசனை கேட்டுச் செயல்படுவது நல்லது. நீங்கள் கடன் கொடுத்திருந்தால் இந்த வாரம் திரும்பக் கிடைக்கும்.
அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கு கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன. சிலருக்கு இடமாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
துலாம் ராசி
பண வசதி நல்லபடியே இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
பிள்ளை அல்லது பெண்ணின் திருமண விஷயத்தில் இந்த வாரம் ஈடுபடவேண்டாம். வாரத்தின் பிற்பகுதியில் கணவன் - மனைவிக்கிடையே சிறிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும்.
வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும்.
ஆனாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு சோர்ந்த மனதுக்கு ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கடையை விரிவு படுத்துவதற்கான எண்ணம் இருந்தால் இந்த வாரம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
விருச்சிக ராசி
பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது என்ப தால் நிம்மதியாக இருப்பீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு உரிய சிகிச்சையினால் உடனுக்குடன் சரியாகும்.
வேலைக்குச் செல்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையே காணப்படுகிறது. வேறு வேலைக்கு அல்லது வேறு இடத்துக்கு மாற நினைப்பர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். சாதகமாக முடியும்.
தனுசுராசி
பண வரவுக்குக் குறைவில்லை. அதேசமயம் தேவையற்ற சில செலவுகளும் ஏற்படக் கூடும். அவசியத் தேவை என்றாலும்கூட இப்போது கடன் வாங்கவேண்டாம். திருப்பிக் கொடுப்பதற்கு சற்று கடினமாக இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பால்ய நண்பர்கள் உங்கள் மனதுக்கு ஆறுதலாக இருப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.
இப்போதைக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது. சிலருக்கு இட மாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை
மகரராசி
பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாலும், தேவையற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
ஆரோக்கியம் சிறிதளவு பாதித்து உடனுக்குடன் சரியாகும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.
வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.
வியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவு படுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை என்பதால் பொறுமை அவசியம்.
கும்ப ராசி
பணவரவும் அதற்கேற்ற செலவுகளும் சமமாக இருக்கும் என்பதால் சமாளித்து விடுவீர்கள். சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை அவசியம். இருக்கும் வீட்டை மாற்றும் முயற்சியில் இப்போது ஈடுபடவேண்டாம்.
வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு இந்த வாரம் சில சலுகைகள் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள் சற்று பொறுமை காக்கவேண்டியது அவசியம்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். கடன் கொடுப்பதையும் கடன் வாங்குவதையும் இந்த வாரம் தவிர்க்கவும்.
மீனராசி
பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். செலவுகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கவும். வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரும். அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும்.
சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும். வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா
