22 ஆம் திகதிக்கு பின்னர் அரசியலில் என்ன நடக்கும்!
பொது எதிர்க்கட்சி என்று அழைக்கப்படும் கூட்டணியின் நுகேகொடை பேரணி 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதன் பின்னணியில் எதிர்க்கட்சி அரசியல் இன்னும் குழப்பமானதாக மாறும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த ஆய்வாளர்களின் கூற்றுப்படி, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் உள்ளகப் பிளவுகள் தீவிரமடைந்து வருவதற்கான அறிகுறிகள் ஏற்கனவே உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த பேரணி காரணமாக நாமல் ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க கூட்டணிக்குள் உள்ள பிளவுகளும் தீவிரமடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தர்க்கரீதியான வாதங்கள்
தாராளவாதிகளும், தர்க்கரீதியான வாதங்களை முன்வைக்கும் யூடியூப் சேனல்களும், இந்தப் பேரணிக்குப் பிறகு 22 ஆம் திகதி முதல் எதிர்க்கட்சிக்கு என்ன நடக்கும் என்று கிண்டலாக ஊகிக்கின்றன.

இதன் பின்னணியில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார, அடுத்த ஆண்டு பொது எதிர்க்கட்சி என்று அழைக்கப்படும் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.
21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் பேரணியில் இணைவது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எனினும் கட்சி தலைவர் குறித்த பேரணியில் கலந்துக்கொல்லப்போவதில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் முடிவுக்கு எதிராக நேரடியாக வாக்களித்தனர்.
மேலும், நாமல் மற்றும் ரணில் தலைமையிலான பேரணியில் எதிர்க்கட்சியின் ஒரு பகுதியினர் பங்கேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி
இவ்வாறான விடயங்களால் உள்ளக பிளவுகள் வெளிப்பட்டுள்ளன.

இவ்வாறு கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள நுகேகொடை பொதுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பல சக்திவாய்ந்த செயற்பாட்டாளர்கள் பலர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை தொடர்ந்து கேட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் நிர்வாகக் குழு உட்பட பல கூட்டங்களில் இதுபோன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொள்ளாவிட்டால், கட்சியின் பிரதிநிதி ஒருவர் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதிநிதிகள் கடுமையாகக் கோரிக்கை விடுத்திருந்தாலும், சஜித் பிரேமதாச அதற்கு உடன்படவில்லை என கூறப்படுகிறது.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு குழுவுடன் இணைந்து பயணிக்கப் போவதில்லை என்று கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபகசவின் குடும்பம்
இதன்படி மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபகசவின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் பின்னணியில், அவரிடம் உதவி கோருவது நல்லது என தெரிந்தவர்களுக்கு தற்போது அவருடன் இணைந்து நிற்பது தவறாகும் என கூறுவது எப்படி சரியாக அமையும் என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் யார் திருடன், யார் திருடன் என்று கூச்சலிட்ட எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் இப்போது ஒரே மேடையில் நின்று, போராட ஆரம்பித்துள்ளன.
நாமல் ராஜபக்சவின் முகாமும், ரணில் விக்ரமசிங்கவின் முகாமும் இந்த நாட்டு மக்களை போராட்டத்திலும் தேர்தலிலும் தோற்கடித்துவிட்டன.
ஆகையால் (21) இது ஒரு பொதுப் பேரணி அல்லது வேறு எதுவும் அல்ல என்றும், இது மக்களுக்காகச் செய்யப்பட்டிருந்தால், எதிர்க்கட்சி கடந்த காலத்தில் நிறைய விடயங்களைச் செய்திருக்க முடியும் என விமர்சிக்கப்படுகிறது.
ஆனால் அது என்ன செய்கிறது? இப்போது நாமல் ராஜபக்ச மீண்டும் ஒரு முகாமை உருவாக்க விரும்புகிறார் என விமர்சனங்களும் வலுத்துள்ளது.
அந்த தோற்கடிக்கப்பட்ட அரசியல் முகாமை நாமல் தற்போது உருவாக்க விரும்புகிறார்.
இந்த நாட்டு மக்கள் கடந்த காலங்கயில் நிராகரித்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி, மறுபுறம், தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் அனைவரும் ஒரே மேடையில், நுகேகோடாவில் நிற்கபோகின்றனர்.
இது அதிகாரத்திற்காக விளையாடப்படும் விளையாட்டு என சில தரப்புக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்