புதிய அம்சங்களுடன் வட்ஸ்அப் : மற்றைய செயலிகளை ஓரம் தள்ளுமளவிற்கு பயனர்களுக்கு இத்தனை நன்மையா!

WhatsApp Meta
By Kathirpriya Sep 25, 2023 12:27 PM GMT
Report

உலகலாவிய ரீதியில் அதிகளவு பயனர்களை கொண்ட செயலியாக விளங்குகின்ற வட்ஸ்அப்,  தற்போது அடுத்த கட்டத்திற்கு தன்னை முன்னேற்றியுள்ளது, பயனர்களுக்கு ஏராளம் நன்மைகளை வழங்கும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய அம்சங்கள் பயனாளர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த புதிய அம்சங்கள் ஐஓஎஸ்(IOS) மற்றும் அன்ரொய்ட் (Android) ஆகிய இரண்டிலும் பயன்பாட்டிலுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வட்ஸ் அப் அறிமுகம் செய்யும் புதிய தொழினுட்பம்

வட்ஸ் அப் அறிமுகம் செய்யும் புதிய தொழினுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சங்களாவன,

  • அனுப்பிய செய்திகளை திருத்துதல்
  • பெயரின்றி குழுக்களை ஆரம்பித்தல்
  •  திரையை பகிரும் அமைப்பு
  • HD புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்தல்  
  • பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளல்

மருத்துவத்துறை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்: மனிதனின் மூளையை ஆராயும் புதிய சிப் அறிமுகம்

மருத்துவத்துறை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்: மனிதனின் மூளையை ஆராயும் புதிய சிப் அறிமுகம்

அனுப்பிய செய்திகளை திருத்துதல்

பயனர்கள் ஏற்கனவே அனுப்பிய செய்திகளை திருத்துவதற்கு WhatsApp இப்போது அனுமதிக்கிறது.  

Whatsapp Chat Editing

ஒரு செய்தியை அனுப்பிய பிறகு, அதைத் திருத்த 15 நிமிடங்களுக்கு ஒரு சாளரம் கிடைக்கும்,அதனை பயன்படுத்தி, அனுப்பிய செய்திகள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் போன்றவற்றினை திருத்திக்கொள்ள முடியும்.

அனுப்பிய செய்தியைத் திருத்த, நீங்கள் திருத்த வேண்டிய செய்தியைத் தட்டிப் பிடிக்கவும் > விருப்பங்களுடன் ஒரு பாப்அப் தோன்றும் > "திருத்து" பொத்தானைத் தட்டவும், அது மீண்டும் தட்டச்சு செய்வதற்கான உரைப்பெட்டியை உங்களுக்கு வழங்கும்.

அதில் தேவையான திருத்தங்களை உள்ளீடு செய்து திருத்தங்களை மேற்கொள்ள முடியும். 

 

நீல நிறத்தில் ஒளிரும் கடல்: இதற்கு பின்னால் இத்தனை காரணங்களா..!

நீல நிறத்தில் ஒளிரும் கடல்: இதற்கு பின்னால் இத்தனை காரணங்களா..!

பெயரின்றி குழுக்களை ஆரம்பித்தல்

பயனர்கள் இப்போது பெயரின்றி குழுக்களை உருவாக்கலாம் என்று வட்ஸ்அப் அறிவித்துள்ளது.

புதிய அம்சங்களுடன் வட்ஸ்அப் : மற்றைய செயலிகளை ஓரம் தள்ளுமளவிற்கு பயனர்களுக்கு இத்தனை நன்மையா! | Whatsapp Update Google Pay Apps New Upi Feature

பயனர்கள் ஒரு குழுவை அவசரமாக தொடக்க வேண்டியிருக்கும் நிலையில் உடனடியாக பொருத்தமான பெயர்கள் நினைவுக்கு வராத போது குழுக்களை உருவாக்குவதில் ஏற்படுகின்ற சிக்கல்களை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, குழுவுக்கு பெயரிடப்படாதவிடத்து குழுவை துவக்கி வைத்தவர்களின் பெயர்கள் குழுவின் பெயரில் இடம் பெரும் அதனை வைத்து குழுக்களை இனங்கண்டு கொள்ளலாம், இது குழு அட்மின் மாற மாற குழுவின் பெயரும் மாறுவதை போல இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ள கூகுள் : ஜெமினி செயற்கை நுண்ணறிவு அமைப்பு அறிமுகம்.

அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ள கூகுள் : ஜெமினி செயற்கை நுண்ணறிவு அமைப்பு அறிமுகம்.

திரையை பகிரும் அமைப்பு

இனிமேல் பயனர்கள் வட்ஸ்அப் இல் வீடியோ அழைப்புகளில் இணையும் போது பயனர்கள் தங்கள் திரையைப் பகிரலாம் - பெரிதாக்குதல் (ZOOM) போன்றவற்றை நிகழ்த்த முடியும்.

புதிய அம்சங்களுடன் வட்ஸ்அப் : மற்றைய செயலிகளை ஓரம் தள்ளுமளவிற்கு பயனர்களுக்கு இத்தனை நன்மையா! | Whatsapp Update Google Pay Apps New Upi Feature

வட்ஸ்அப்பை அணுக எந்த பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தினாலும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தக்கூடியவாறு இந்த அமைப்பு வடிவமைக்கபட்டுள்ளது.

இனிமேல் வேலை சம்மந்தப்பட்ட கூட்டங்களை நடாத்துவதற்கு ZOOM,MSTeams போன்ற செயலிகளிற்கு பதில் வட்ஸ்அப் மூலமாகவே அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என்று மெட்டா தெரிவிக்கிறது.

வட்ஸ்அப் திரையைப் பகிர்வதற்கு, முதலில் வீடியோ அழைப்பைத் தொடங்க வேண்டும் மற்றும் திரையின் அடிப்பகுதியில் காணப்படும் "பகிர்" ஐகானைத் தட்டுவதன் மூலம் பயனர்கள் தங்கள் திரையை பகிர்ந்துகொள்ள முடியும்.

அப்பிள் ஐபோன் 12 இனை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

அப்பிள் ஐபோன் 12 இனை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

 HD புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்தல்

HD புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை கூட இனி வட்ஸ்அப் மூலம் அனுப்ப முடியும்.

புதிய அம்சங்களுடன் வட்ஸ்அப் : மற்றைய செயலிகளை ஓரம் தள்ளுமளவிற்கு பயனர்களுக்கு இத்தனை நன்மையா! | Whatsapp Update Google Pay Apps New Upi Feature

அதற்கு பயனர்கள் முதலில் அரட்டையைத் (Chat) திறக்க வேண்டும் > இணைப்பு ஐகானைத் தட்டவும் (Link Icon)> நீங்கள் அனுப்ப வேண்டிய புகைப்படங்களைத் தேர்ந்தெடுக்கவும் > "HD" பொத்தானைத் தட்டி அனுப்பவும்.

வட்ஸ்அப்பில் HD காணொளியினை அனுப்புவதற்கும் இதே செயல்முறையையே பின்பற்ற வேண்டும்.

ஐபோன் 15 வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்: விலை எவ்வளவு தெரியுமா...!

ஐபோன் 15 வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்: விலை எவ்வளவு தெரியுமா...!

பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளல் 

இவை தவிரவும் யாருமே எதிர்பாராத புதிய அம்சம் ஒன்றையும் வட்ஸ்அப் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய அம்சங்களுடன் வட்ஸ்அப் : மற்றைய செயலிகளை ஓரம் தள்ளுமளவிற்கு பயனர்களுக்கு இத்தனை நன்மையா! | Whatsapp Update Google Pay Apps New Upi Feature

ஏற்கனவே வட்ஸ்அப்பில் பெமேண்ட் (Payment) என்ற ஆப்ஷன் உள்ளது. இதில் பயனர்களின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது வட்ஸ்அப்பில் யுபிஐ செயலிகள் அறிமுகமாகிறது. அதாவது, கூகுள் பே, போன் பே, பேடிஎம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் மூலம் வாட்ஸ் அப்பில் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும்படியான அம்சம் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே இந்த அம்சம் சிங்கப்பூர் மற்றும் பிரேசிலில் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

பிரபஞ்சத்தில் சூரியனைப் போன்று பிறந்ததிருக்கும் புதிய நட்சத்திரம் : நாசா தெரிவிப்பு

பிரபஞ்சத்தில் சூரியனைப் போன்று பிறந்ததிருக்கும் புதிய நட்சத்திரம் : நாசா தெரிவிப்பு

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025