அரச பதவியை துறந்தவருக்கு வெள்ளைவானில் வந்தவர்களால் அச்சுறுத்தல் - காவல்துறையில் முறைப்பாடு
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன(Dushan Gunawardena), அடையாளம் தெரியாத குழுவினர் வெள்ளை வானில் வந்ததாகவும், தனது வீட்டின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியது குறித்தும் கிருலப்பனை காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை காலை சந்தேகத்திற்கிடமான வெள்ளை வான் தனது வீட்டின் பின்புறம் வீதியில் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
வீட்டின் பின்பக்க வாசல் அருகே வாகனத்தில் இருந்து இறங்கிய ஒருவர் வாசலில் பதிக்கப்பட்ட எண்ணை சரிபார்த்ததாகவும், பக்கத்து வீட்டுக்காரர் அதைப் பார்த்து தனக்கு தகவல் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
குணவர்தன, தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மாதத்திற்கு முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்த போதிலும், இதுவரை அவரிடமிருந்து வாக்குமூலம் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.