வானை நோக்கி சுட்ட அந்த அமைச்சர் யார்...!
Parliament of Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
Sri Lanka Police Investigation
By Sumithiran
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர் ஒருவர் மதிவெலவில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுபோதையில் உறுப்பினரின் வீட்டு மேல்மாடிக்கு வந்த உறுப்பினர் மூன்று முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் அதே வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.
சர்ச்சைக்குரிய சம்பவங்களால்
இராஜாங்க அமைச்சர் கடந்த காலங்களில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்களால் சமூகத்தில் விமர்சிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (5) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரால் உயர் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.