மகிந்தவின் வீழ்ச்சிக்கு யார் காரணம் - உண்மையை உடைத்தார் தேரர்
மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு ராஜபக்ச பிரமுகரான பசில் ராஜபக்ஷ முக்கிய காரணியாக இருந்ததாக பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் இன்று (31) தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி அபயாராமய விகாரையில் இன்று (31) நடத்திய விஷேட சங்க மாநாட்டில் வண.பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பசில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 69 இலட்சம் மக்களுக்கு மாத்திரம் அல்லாது முழு நாட்டையும் நேசிக்கும் மக்களின் உயர்ந்த அபிலாஷைகளுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் சந்தேகமும் நிலவுவதாக தெரிவித்தார்.
அனைவரின் கருத்துக்கும் செவிசாய்க்காமல் இரட்டைக் குடியுரிமையை மீண்டும் கொண்டு வந்த அரசாங்கம் பாரிய தவறை இழைத்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு குடும்ப ஆட்சியே காரணம் எனவும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கவில்லை. அன்று கோட்டாபயவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதை மகாசங்கம் தீர்மானித்தது போல், இன்று அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை மகாசங்கமே தீர்மானிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.