சிறுவர்களை துரத்தி,துரத்தி நாய்கள் கடிப்பது ஏன்..! வெளியான திடுக்கிடும் தகவல்
நாய்கள்(dogs) பெரியவர்களை விடவும் சிறுவர்களையே பெரும்பாலும் துரத்தி துரத்தி கடிப்பதுண்டு. இவ்வாறு நாய்கள் சிறுவர்களை(children) ஏன் குறிவைத்து தாக்குகின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரபல கால்நடை மருத்துவர் பற்றிக் ஜோஷ்வா தெரிவிக்கையில்,
"நாய்களின் பெரும்பாலான இலக்காக இருப்பது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தான். ஏனென்றால், அந்த வயதில் உள்ள குழந்தைகளின் செயற்பாடுகள் அப்படி இருக்கும்.
நாய்களுக்கு பிறவிலேயே பிடிக்காத செயல்பாடுகள்
குழந்தைகள் பொதுவாக ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள். திடீர் திடீரன ஓடுவார்கள். கை கால்களை அசைப்பார்கள். பயப்படுவார்கள். இவை அனைத்துமே நாய்களுக்கு பிறவிலேயே பிடிக்காத செயல்பாடுகள்.அதனால், நாய்களுக்கு குழந்தைகள் மீது சட்டென பார்வை திரும்புகிறது.
நாய்களின் கண்களை உற்று பார்த்தால்
அதேபோல, குழந்தைகள் நாய்களுக்கு இணையான உயரத்தில் இருப்பார்கள். அப்படி இருக்கும் போது, நாய்களின் கண்களை சரிக்கு சமமாக பார்ப்பார்கள். நாய்களின் கண்களை உற்று பார்த்தால் அவற்றுக்கு பிடிக்காது.
அப்படி பார்ப்பது, ஏற்கனவே கோபத்தில் உள்ள நாய்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தும். அதனால்தான் குழந்தைகளை நாய்கள் அதிக அளவில் தாக்குகின்றன" என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |