பொது நிகழ்ச்சிகளில் தனது மகளுடன் பங்கேற்கும் வடகொரிய அதிபர் : வெளியான காரணம்
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் தற்போது பொது நிகழ்ச்சிகளில் தனது மகளை அழைத்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ள நிலையில் அதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,
“வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு மகள் இருக்கிறார். இவர் தான் கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாக கருதப்படுகிறார்.
பெயர் மற்றும் வயது
இவரது பெயர் மற்றும் வயது என்ன? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. இதில் தொடர்ந்து ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் அவரது பெயர் கிம் ஷு ஏ என்று இருக்கலாம் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது கிம் ஜாங் உன் தனது மகளுடன் தான் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ராணுவ அதிகாரிகள் உள்பட உயர் அதிகாரிகளுடன் சந்திப்பிலும் கிம் ஜாங் உன்னுடன் அவரது மகள் தவறாமல் பங்கேற்கிறார்.
கிம் ஜாங் உன்னின் மகளை பார்க்கும் அதிகாரிகள் அவர் முன்பு மண்டியிட்டு வணங்குகின்றனர். இதுபற்றி தென்கொரியாவின் உளவுத்துறை சார்பில் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிம் ஜாங் உன்னுக்கு இந்த ஒரு குழந்தை மட்டுமின்றி இன்னும் குழந்தைகள் கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் குறித்த விபரம் எதுவும் வெளிவரவில்லை.
அரசியல் வாரிசு
தற்போதைய சூழலில் கிம் ஜாங் உன்னுக்கு பிறகு அடுத்த அரசியல் வாரிசாக அவரது மகள் வர அதிக வாய்ப்புள்ளது என கருதப்படுகிறது.
மேலும் தற்போது கிம் ஜாங் உன்னிற்கு 40 வயது ஆகிறது. அவர் நலமாகவே இருக்கிறார். அவருக்கு எந்த உடல் நல பிரச்சனையும் இல்லை. இதனால் தற்போதைய சூழலில் அதிபர் மாற்றம் என்பது நிகழாது.
இருப்பினும் கிம் ஜாங் உன் தனது மகளை தனது அரசியல் வாரிசாக கருதி அனைத்து இடங்களுக்கும் அழைத்து செல்கிறார்'' என தென்கொரியாக அதிகாரிகள் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |