தென்னிலங்கையில் பயங்கரம்...! கணவனை கொன்று ஏரியில் வீசிய மனைவி
குருநாகல் பகுதியில் கணவனை கொலை செய்தாக சந்தேகிக்கப்படும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் குருநாகல் (Kurunegala) - கிரிபாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேல் கிரிபா - சரகன்வ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய உதய குமார என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினரின் விசாரணை
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவனை கொலை செய்துவிட்டு, இரவில் சடலத்தை தோளில் சுமந்து சென்று மேல் கிரிபா ஏரியில் வீசியதாக மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபரான மனைவி, கணவரின் கழுத்தை நெரித்து சடலத்தை தோளில் சுமந்து சுமார் 150 மீற்றர் தூரம் வரை சென்றுள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் 33 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |