விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலை!
புதிய இணைப்பு
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையாகியுள்ளார்.
குறித்த வருகையானது எவ்வித முறைப்பாடு தொடர்பிலான விசாரணை என்பது பற்றிய விபரங்களை எந்த தரப்பும் வெளியிடவில்லை.
எனினும் அண்மைக்காலமாக கடவுச்சீட்டு மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மீது சுமத்தப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை செய்து வரும் தம்மை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாக அண்மையில் விமல் வீரவன்ச கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் துறையின் முன் அழைக்கப்பட்டுள்ளார்.
விசாரணை நடத்தப்படுவது தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றுகாலை முன்னிலையாகுமாறு அழைப்பு
அதன்படி,இன்று(15)காலை 9.00 மணிக்கு அங்கு முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா
