குடும்ப பெண்ணின் சட்டவிரோத செயல் - விசேட அதிரடிப்படையினரால் கைது
Sri Lanka Police
Ampara
Sri Lanka
By Dharu
தடை செய்யப்பட்ட சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருந்த பெண்ணொருவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நிந்தவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை அறிந்து அங்கு சென்ற கல்முனை விசேட அதிரடிப்படையினர் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கை

கைது இதன்போது சுமார் 800 வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருந்த 54 வயதுடைய குடும்ப பெண் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீதிமன்ற நடவடிக்கைக்காக நிந்தவூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி