இலங்கை திரும்ப தயாரான நிலையில் ஓமானில் பெண் உயிரிழப்பு
Sri Lanka
Death
By Sumithiran
ஓமானில் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்திருந்த இலங்கை பெண்ணொருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் மஹவ தலதாகம பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவரென தெரிவிக்கப்படுகிறது.
ஓமானில் உள்ள இலங்கை தூதரக பாதுகாப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த போதே நோய்வாய்ப்பட்டு அப்பெண் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அவர் இலங்கைக்கு புறப்படுவதை எதிர்பார்த்திருந்தபோது
நோய்வாய்ப்பட்டதாகவும், ஓமானி
லுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்