குளிர்பானத்தில் மயக்க மருந்து வழங்கி பெண்ணின் நகை கொள்ளை

Batticaloa Eastern Province
By Bavan Feb 05, 2026 11:51 AM GMT
Report

மட்டக்களப்பில் உள்ள பிரதான பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த முதியவரான பெண் ஒருவரின் 35 இலட்சம் ரூபா பெறுமதியான நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக காத்திருந்த நிலையிலேயே இவ்வாறான ஒரு நிலையை அவர் சந்தித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வருகையில், 

புலம்பெயர்ந்தோருக்காக முழு வீச்சில் செயற்படும் அநுர ...! அடித்துக்கூறும் எதிர்தரப்பு

புலம்பெயர்ந்தோருக்காக முழு வீச்சில் செயற்படும் அநுர ...! அடித்துக்கூறும் எதிர்தரப்பு

மட்டக்களப்பு  பேருந்து தரிப்பு நிலையம் 

மட்டக்களப்பு - புதூர் பிரதேசத்துக்கு உறவினர் வீட்டிற்கு செல்வதற்கு பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தில் காத்திருந்த 64 வயதுடைய முதியவரான பெண் ஒருவருக்கு யுவதி ஒருவர் குளிர்பான போத்தலில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குளிர்பானத்தில் மயக்க மருந்து வழங்கி பெண்ணின் நகை கொள்ளை | Woman Jewelry Stolen While Giving Medicine

அவர் மயங்கியதும் அவர் அணிந்து சென்ற 35 இலட்சம் ரூபா பெறுமதியான 5 பவுண் தங்க சங்கிலி 2 அரைப் பவுண் இரண்டு காப்புக்களை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை (4) பிற்பகல் இடம் பெற்றுள்ளதுடன் மயக்கமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

புதூர் பிரதேசத்திலுள்ள அவரது சகோதரியின் மகளின் வீட்டிற்கு செல்வதற்காக சம்பவ தினமான நேற்று பகல் 11.00 மணிக்கு அங்கிருந்து பயணிகள் போக்குவரத்து பேருந்து வண்டியில் ஏறி மட்டக்களப்பு நகரில் உள்ள பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு பிற்பகல் 2.00 மணியளவில் வந்தடைந்துள்ளார்.

யாழில் இ.போ.ச பேருந்தின் பிரேக் செயலிலழப்பு - நூலிழையில் தப்பிய பயணிகள்

யாழில் இ.போ.ச பேருந்தின் பிரேக் செயலிலழப்பு - நூலிழையில் தப்பிய பயணிகள்

இளம் யுவதி

இதனையடுத்து புதூருக்கு செல்வதற்கான பேருந்து வண்டி 10 நிமிடத்துக்கு முன்னர் சென்றதையடுத்து அடுத்த பேருந்து காத்திருந்துள்ளார்.

இதன்போது அங்கு மோட்டர் சைக்கிள் ஒன்றில் இளைஞன் ஒருவருடன் வந்த இளம் யுவதி ஒருவர் பேருந்து வண்டிக்காக காத்திருந்த அந்த முதியவரான பெண்ணுக்கு அருகில் சென்று உரையாடிய நிலையில்,  தங்க ஆபரணங்களை கழற்றி கைபையில் வைக்கவும்  எனவும் இங்கு கள்ளர்கள் அதிகம் என்றும் கூறியுள்ளார்.

இதன்போது அவர் கொண்டு வந்த குளிர்பானத்தை கொடுத்து அதனை குடிக்குமாறு பல தடவை கேட்டுக் கொண்டதை அடுத்து அதனை குறித்த முதியவரான பெண் பருகியுள்ளார்.

இதன்போது அவர் மயக்கமானதையடுத்து அவரின் கைபையில் இருந்த 7 அரை பவுண் கொண்ட தங்க ஆபரணங்களை அந்த யுவதி கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளார்.

இந்த நிலையில் அங்கு மாலை 5.30 மணியளவில், பேருந்து நிலையத்துக்கு சென்ற ஒரு பெண் குறித்த முதியபெண் அங்கு கிடந்துள்ளதை அவதானித்து அவரின் உறவினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதன்போது அவரை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு : சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு : சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023