காதலனை கொலை செய்த பெண் - போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது
Sri Lanka Police
STF
Attempted Murder
Sri Lanka Police Investigation
Death
By Dharu
அஹங்கம, மிதிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இளைஞன் ஒருவரை கொன்ற சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு இளைஞனை மிதிகம பிரதேசத்திற்கு அழைத்து வந்து கொலை செய்துள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
24 வயதுடைய இளைஞர்

கொலைசெய்யப்பட்ட இளைஞன் குறித்த பெண்ணுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மஹரகம பிரதேசத்தில் மறைந்திருந்த 15 ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டு மாத்தறை திஹாகொட காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சிலதினங்களுக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த கொலையில் 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி