யாழில் கிணற்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
Sri Lanka Police
Jaffna
Jaffna Teaching Hospital
Death
By Thulsi
யாழ்ப்பாணம் (Jaffna) - சாவகச்சேரியில் கிணறொன்றுக்குள்ளிருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலமானது யாழ். சாவகச்சேரி (Chavakachcheri) காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில் நேற்று (02) மாலை மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அங்குள்ள வயல் ஒன்றுக்கு பசளை இடச் சென்றவர்கள், வயல் கிணற்றுக்குள் வயோதிப மாது ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ணுற்று காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனை தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு சாவகச்சேரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி