காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உலகத் தலைவர்கள்
ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்த உலக நாட்டு தலைவர்கள் இன்று (10) மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்தியாவின் புதுடில்லியில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜி20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ராஜ்கோட்டில் அமைந்துள்ள
அந்தவகையில் இரண்டாவது நாளான இன்று (10) மாநாடு ஆரம்பமாவதற்கு முன் காலை 8.30 மணியளவில் உலக நாட்டு தலைவர்கள் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
#WATCH | G 20 in India | Japanese PM Fumio Kishida arrives at Delhi's Rajghat to pay homage to Mahatma Gandhi and lay a wreath. pic.twitter.com/2xoO5V5FUk
— ANI (@ANI) September 10, 2023
அதன்படி உலகத் தலைவர்கள் ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு வந்திருந்தனர், அவர்களுக்கு உரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தலைவர்கள் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.