இலங்கையில் நேற்றைய தினம் 3 269 கொரோனா தொற்றாளர்களா? வேல்ட் மீற்றர் இணையத்தள விபரம்
srilanka
covid19
corona
death
By S P Thas
இலங்கையில் நேற்றைய தினம் 3 ஆயிரத்து 269 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக வேல்ட் மீற்றர் என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 24 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது. அத்துடன் நேற்று முன்தினம் ஆயிரத்து 429 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
எனினும் இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கைக்கு அமைய நேற்றைய தினம் இலங்கையில் 2 ஆயிரத்து 249 தொற்றாளர்களும் நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 386 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வேல்ட் மீற்றர் என்ற இணையத்தளம் உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவல் தொடர்பான தகவல்களை தொடர்ந்தும் வெளியிட்டு வரும் இணையத்தளம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 9 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி