யோஷித - கரன்னாகொட மீதான ஊழல் வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Bribery Commission Sri Lanka Yoshitha Rajapaksa Law and Order
By Sathangani Oct 13, 2026 07:38 AM GMT
Report

புதிய இணைப்பு 

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அதன்படி இம்மாதம் 29ஆம் திகதி பிரதிவாதிகளுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது  சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 2007 ஜூன் 8ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், யோஷித ராஜபக்‌சவை பிரித்தானியாவில் உள்ள ரோயல் கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இளம் அதிகாரிகளுக்கான பயிற்சி நெறியில் பங்கேற்கச் செய்வதற்கு முறையற்ற வகையில் ஏற்பாடுகளைச் செய்ததன் மூலம் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக வசந்த கரன்னாகொட மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் முறையற்ற அனுகூலத்தைப் பெற்றதாக யோஷித ராஜபக்‌ச மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இருவருக்கும் எதிராக மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகளை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச, அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில் சற்று முன்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஷிரந்திக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

ஷிரந்திக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முதலாம் இணைப்பு 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச இன்று (13) நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முறையான கல்வித் தகுதிகள் இன்றி கடற்படை அதிகாரியாக நியமிக்கப்பட்டு பிரித்தானியாவில் பயிற்சிப் பாடநெறி ஒன்றில் பங்கேற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக யோஷித ராஜபக்ச மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அவர் அங்கு முன்னிலையாகவுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு

இதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் யோஷித ராஜபக்ச கடந்த ஜூன் மாதம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யோஷித - கரன்னாகொட மீதான ஊழல் வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Yoshitha Rajapaksa To Be Produced In Court Today

நாமல் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்! தாய், தந்தை வைத்தியசாலையில்

நாமல் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்! தாய், தந்தை வைத்தியசாலையில்

வீதியை விட்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து - ஒருவர் பலி: சாரதி அதிரடியாக கைது

வீதியை விட்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து - ஒருவர் பலி: சாரதி அதிரடியாக கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026