மண்சரிவில் சிக்குண்ட இளம் பிக்கு பலி!
Sri Lanka Police Investigation
Death
By pavan
பேராதனை - தண்டுவெவ ரஜமஹா விகாரையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விகாரையின் மேல் தளத்தினில் பிக்கு மத வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த போது, இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவத்தில் 18 வயதான பிக்கு ஒருவரே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை பலனின்றி

சம்பவத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட பிக்கு,பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பேராதனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி