யாழில் தொடருந்துடன் மோதி படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (10) இடம்பெற்ற தொடருந்து விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
கொட்டடி பகுதியை சேர்ந்த 23 வயதான சிவராசா சிவலக்சன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பற்ற தொடருந்து கடவை
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு தொடருந்துடன், அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற போது இளைஞன் மோதி விபத்துக்கு உள்ளானார்.

இந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த தொடருந்து கடவை பாதுகாப்பற்ற கடவையாக காணப்படும் நிலையில், பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்ற நிலையிலும் அதனை பாதுகாப்பான தொடருந்து கடவையாக மாற்றம் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், தொடர்ந்து அது பாதுகாப்பற்ற கடவையாகவே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |