சீனாவின் வியூகங்களை முடக்கும் இந்தியா..! இலங்கையில் தீவிர இந்திய - சீன மோதல்
இந்திய - சீனா
இலங்கை தீவை மையப்படுத்தி மீண்டும் இந்திய சீன ராஜதந்திர மோதல் தீவிரம் அடைந்திருக்கின்றது.
சிறிலங்காவின் அரசியல் களத்தில் சிறிய கட்சிகளை சீனா வளைத்துப் போட்டிருந்தாலும் கூட தற்போது வீரியமடைந்திருக்கும் இந்திய - சீன ராஜதந்திர மோதல் மேலும் மோசமடைந்தால் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நாற்கர பொறிமுறை சீன நலன்களை உரசக் கூடும் மாறும் என்ற ஊகங்கள் உள்ளன.
சீனாவின் உளவுக்கப்பலான யுவான் வாங் 5 இன் இலங்கை பயணத்தின் பின்னர், இலங்கையில் உள்ள சீன தூதர் ஒருவர் எழுதிய ஆக்கம் ஒன்றில் இலங்கைக்கு வடக்காக உள்ள அயல்நாடு ஒன்று 17 முறை இலங்கையை ஆக்கிரமித்ததாக அவர் குறிப்பிட்டார்.
சீனத் தூதரின் கருத்துக்களுக்கு இந்தியா பதிலடி

இப்போதும் அவ்வாறன ஆக்கிரமிப்பு தொந்தரவுகள் இடம்பெறுவது உட்பட்ட பல கருத்துக்களை சீனத் தூதர் எதிர்மறையாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சீனத் தூதரின் இந்த கருத்துக்களுக்கு நேற்று இந்தியா பதிலடி வழங்கியிருக்கின்றது.
நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு தற்போது தேவையானது ஆதரவே தவிர இன்னொரு நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அதாவது சீனாவுக்கு சேவை செய்வதற்குரிய அழுத்தங்கள் இல்லை என இந்தியாவின் பதிலடியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் சீனத் தூதரின் கருத்துக்கள் இராஜதந்திர பண்புகளை மீறும் அவரது தனிப்பட்ட விடயம் சார்ந்தது எனவும் இந்தியா எள்ளல் செய்திருக்கின்றது.
மேலும், தாய்வான் போன்ற அயல் நாடுகளை தனது சொந்த நாடு அச்சுறுத்துவது போல இந்தியாவும் நடந்துகொள்ளலாம் என சீனத் தூதர் நினைத்திருந்தால் அது தவறு எனவும் இந்தியா சீனாவை விட மிகவும் வித்தியாசமான நாடு எனவும் இந்தியாவின் பதிலடி வந்திருக்கின்றது.
இதன் விரிவான பார்வையுடன் வருகிறது இன்றைய செய்திவீச்சு பகுதி,
இலங்கை அரகலய சதுரங்கத்தில் மகிந்தவின் அரசியலை உருமாற்றிய 121 நாட்கள் 16 நிமிடங்கள் முன்