ரஷ்யாவால் விரிவடைய போகும் போர்: ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
ஐரோப்பிய நாடுகளுக்கும் போர் விரிவடையும் அபாயமுள்ளதாக உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) எச்சரித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவைத் (Russia) தடுத்து நிறுத்த ஐ.நா நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி எச்சரிக்கை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உலகம் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையிலான மிகவும் அழிவை உண்டாக்கூடிய ஆயுதங்களுக்கான போட்டியில் உள்ளது.
ரஷ்யாவை இப்போதே தடுத்துநிறுத்த ஐ. நா கட்டாயம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
இல்லையேல், ஐரோப்பாவுக்கும் போரை விரிவுபடுத்த விளாடிமிர் புடின் முற்படுவார்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
