நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை
கடந்த மாதம் 13ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் (ஓகஸ்ற்) 13 ஆம் திகதி நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 07 தமிழக மீனவர்களும் இன்று யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
நிபந்தனையுடன் விடுதலை
இதன்போதே அவர்கள் அனைவரும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்படனர்.
6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட 2 வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையுடன் 7 மீனவர்களையும் விடுவித்து ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.
அத்துடன் ஓகஸ்ற் மாதம் 29 ஆம் திகதி நெடுந்தீவு கடலில் மீன்பிடி உபகரணங்கள் ஏதும் இல்லாமல் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்றுறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட 4 மீனவர்களும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
