உலகிலேயே அதிக தங்கம் கொண்ட நாடு எது தெரியுமா...!
உலகளாவிய ரீதியில் அதிக தங்கம் வைத்திருக்கும் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.
‘ஃபோர்ப்ஸ்’ நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி, உலகிலேயே அதிக தங்க இருப்புக்களை கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது.
இதன்படி, 81 ஆயிரத்து 336.46 டன் தங்கம் அமெரிக்காவிடம் இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்கத்தின் முக்கிய பங்கு
ஒவ்வொரு நாட்டினதும் கடன் தகுதி மற்றும் ஒட்டு மொத்த பொருளாதார நிலையை நிர்ணயிப்பதில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
தங்கத்தின் இருப்பை அடிப்படையாக கொண்டே அந்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிர்ணயம் செய்ய முடியும்.
நெருக்கடியான காலங்களில் தங்கம் இருப்பு பொருளாதார நிலையை சீரமைக்க உதவுகிறது. அதனால் தான் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலும் கூட, தங்கத்தின் விலை அடிக்கடி உயர்ந்து கொண்டே செல்கிறது.
பொருளாதார நிச்சயமற்ற தன்மை
வளர்ந்து வரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக தற்போது பல நாடுகள் தங்க இருப்பை அதிகரித்து வருகின்றன.
அந்த நாடுகளின் தலைமை மற்றும் ரிசர்வ் வங்கிகள், தங்கத்தின் இருப்பை பாதுகாப்பான சொத்தாக கருதுகின்றன.
இது மட்டுமின்றி ஒவ்வொருவரின் நிலையான மற்றும் நம்பகமான சொத்தாக தங்கம் மதிப்பிடப்படுகிறது.
நாட்டின் நாணய மதிப்பு
வரலாற்று ரீதியாக ஒவ்வொரு நாட்டின் நாணயத்தின் மதிப்பை அதிகரிப்பதில் தங்கத்திற்கு முக்கிய பங்குள்ளது. அமெரிக்க டொலரின் விலை குறையும் போது, தங்கத்தின் விலை அதிகரிக்கிறது.
தங்கத்தின் இருப்புக்கள் சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதியில் முக்கிய பங்கை வகிக்கின்றன. சில நாடுகள் வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்க அல்லது கடன்களுக்கான பிணையமாக தங்கத்தைப் பயன்படுத்துகின்றன.
இருப்பை அடிப்படையாக கொண்டே உலகளாவிய நிதி அமைப்பும் செயல்பட்டு வருகிறது.
தங்க இருப்பு
இந்த நிலையில், அதிக தங்க இருப்புக்களை கொண்ட நாடுகள் தொடர்பில் ‘ஃபோர்ப்ஸ்’ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான தரவுகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், உலகிலேயே அதிக தங்க இருப்புக்களை கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது.
இந்த வரிசையில், 3 ஆயிரத்து 352.65 டன் தங்க இருப்புடன் ஜேர்மனி இரண்டாவது இடத்தையும் 2 ஆயிரத்து 451.84 தங்க இருப்புடன் இத்தாலி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இதனை தொடர்ந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, சுவிட்சர்லாந்து, ஜப்பான், இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் அதிக தங்க இருப்பை கொண்ட 10 நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |