ரஷ்யாவை சூழ்ந்த நூற்றுக்கணக்கான உக்ரைனிய ட்ரோன்கள்: வலுக்கும் மோதல்
உக்ரைன் (Ukraine) மீண்டும் ரஷ்யா (Russia) மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்தில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது ட்ரோன் உக்ரைனால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்குப் பதிலடியாக, உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யா பெரும் அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது.
வெளியிட்ட அறிக்கை
இந்தத் தாக்குதல்களின் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை உக்ரைன் மீண்டும் ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
மாஸ்கோ நகரை இலக்காகக் கொண்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 உக்ரைன் டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய ட்ரோன்கள்
அத்தோடு, மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் நான்கு மணி நேரத்திற்குள் 95 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மாஸ்கோவை இலக்காகக் கொண்டு ஏவப்பட்ட டிரோன்கள் அழிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதனுடன் மத்திய நகரமான துலா மற்றும் மாஸ்கோவின் வடமேற்கே உள்ள ட்வெர் நகரிலும் வான் பாதுகாப்பு பிரிவுகள் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான், தலைநகருக்கு அருகில் 11 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டமையை உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


யார் அகதி..! : உலகத்தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தீர்ப்பு 11 மணி நேரம் முன்
