மோட்டார் வாகன பதிவு திணைக்களத்தில் பெரும் மோசடி : காவல்துறை தீவிர விசாரணை
மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்த அச்சிடப்படாத 12 மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக பொரளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோட்டார் வாகனங்களின் 12 வெற்று புத்தகங்கள் காணவில்லை என வணிக வாகன ஒதுக்கீட்டு துறை அதிகாரி ஒருவர் முறைப்பாடு அளித்துள்ளார்.
விசாரணைகளில் வெளியான தகவல்
காணாமல் போன புத்தகங்களின் இலக்கங்களும் காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அந்த புத்தகங்களில் அந்தந்த எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் அந்த புத்தகங்கள் மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
1000 மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகங்கள் மாயம்
வணிக வாகன ஒதுக்கீட்டுப் பிரிவு உதவி ஆணையர் அலுவலகத்தில் உள்ள அலுமாரியில் புதிதாக அச்சிடப்பட்ட 1000 மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகங்கள் மாயமாகியிருப்பதும், அலுமாரியின் கதவுகள் உடைக்கப்படாமல் இருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
அந்த அறைக்கு செல்லும் கதவு தெரியும் வகையில் சிசிடிவி கமராக்களும் செயல்படுவதால், அதன் மூலமும் விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக வாகன ஒதுக்கீட்டுப் பிரிவின் உதவி ஆணையரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |