இஸ்ரேல் முற்றுகையின் எதிரொலி : சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான கர்ப்பிணிப் பெண்கள்
காசாவில் (Gaza) 16,000 கர்ப்பிணிப் பெண்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை (United Nations) தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் (Israel) மற்றும் பலஸ்தீனத்தை (Palestine) மையமாகக் கொண்டு செயல்படும் ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வந்தது.
இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் (Hamas) அமைப்பினர், நூற்றுக்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
காசா மீதான கொடூர தாக்குதல்
இதையடுத்து இஸ்ரேல் காசா மீதான படையெடுப்பை தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து இரு தரப்பிற்கும் இடையில் கடந்த ஜனவரி மாதம் 19ம் திகதி போர் நிறுத்தம் நடைமுறையானது.
அதன்பின்னர் இடம்பெற்ற ஒருசில விடயங்களினால் போர் நிறுத்தம் உடைக்கப்பட்டடு மீண்டும் காசாவில் இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டது.
மனிதாபிமான உதவி
இதையடுத்து காசாவுக்குள் வரும் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் தொடர்ந்து முடக்கி வந்தது.
மேலும் காசா பகுதியில் குறைந்தது 60,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல்நல சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் என்று காசா சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், காசாவில் இந்த ஆண்டு 16,000 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிய தாய்மார்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலியப் படைகள்
காசாவிற்கு நுழையும் உணவுப் பொருட்களை இஸ்ரேல் தடுத்து வருவதன் காரணமாக இவ்வாறான பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இஸ்ரேலியப் படைகள் காசாவின் 80 சதவீத விவசாய நிலங்களை சேதப்படுத்தியதால் உள்ளூர் காய்கறி உற்பத்தி சரிந்துள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
