அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிவராமின் 17ஆவது ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு

Batticaloa M. A. Sumanthiran P Ariyanethran Taraki Sivaram
By Vanan Apr 29, 2022 07:14 AM GMT
Report

படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் தராகி சிவராமின் 17ஆவது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காந்தி பூங்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள உயிரிழந்த ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

நினைவு தினத்தில் முதலில் தராகி சிவராமின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி கண்டன ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிவராமின் 17ஆவது ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு | 17Th Memorial Tharaki Sivaram

இந்நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன், இரா. சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவான் மற்றும் மதகுருமார், சிவில் சமூக அமைப்பு, மூத்த ஊடகவியலாளர்களான சிவம் பாக்கியநாதன், அ.கங்காதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

குறித்த நினைவுதின நிகழ்வில் ஊடகவியலாளர்களையும் அரசியல்வாதிகளையும் சிவில் உடையில் காணொளி பதிவுசெய்த புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதன்போது “கொழும்பிற்கு ஒரு சட்டமும் மட்டக்களப்பிற்கு ஒரு சட்டமா இருக்கின்றது என்று சாணக்கியன் கேள்வி எழுப்பியதுடன், ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுத்து அவர்களையும் கொலை செய்வதற்கா திட்டம் போடுகின்றீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026