கருங்கடலில் ட்ரோன் தாக்குதல்: வணிகக் கப்பல் கடலில் மூழ்கிப் பேரழிவு...!
உக்ரைன் - ரஷ்ய போரின் தாக்கம் கருங்கடல் பிராந்தியத்தில் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்தநிலையில், நேட்டோ (NATO) உறுப்பு நாடான பல்கேரியாவின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (EEZ) பயணித்த இரண்டு வர்த்தகக் கப்பல்கள் மீது வான்வழி மற்றும் கடல்சார் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இதில் ஒரு கப்பல் கடலில் மூழ்கியுள்ளதாா தெரிவிக்கப்படுகின்றது.
வர்த்தகக் கப்பல்
இந்தநிலையில் டோகோ (Togo) நாட்டு கொடியுடன் பயணித்த ஆல்ஃபா வட்டான் (Alfa Watan) என்ற வணிகக் கப்பல், பல்கேரியாவின் பியாலா (Byala) கடலோர நகரில் இருந்து சுமார் 128 கி.மீ கிழக்கே ட்ரோன்களால் தாக்கப்பட்டு கடலில் மூழ்கியுள்ளது.
இதில் பயணித்த மாலுமிகள் பலர் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையடுத்து பலாவு (Palau) நாட்டு கொடியுடன் பயணித்த ஏபிள் (Able) என்ற மற்றொரு கப்பலும் இத்தாக்குதலில் சேதமடைந்து தீப்பற்றியுள்ளது.
அதில் இருந்த 18 மாலுமிகளும் பல்கேரிய படகுகள் மூலம் மீட்கப்பட்டு பலத்த காயமடைந்த இருவர் வர்னா (Varna) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு ஒரு நாளுக்கு முன்னர், ரோமானிய கடலோரப் பகுதியில் தானியங்களை ஏற்றிச் சென்ற மற்றொரு வர்த்தகக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |