போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை காணவில்லை -காவல்துறை வெளியிட்ட தகவல்
Sri Lanka Police
Sri Lanka
SL Protest
By Sumithiran
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள நாட்களுடன் தொடர்புடைய இருநூறுக்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கலவரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 404 பேரின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டாலும், இதுவரை இருநூறுக்கும் குறைவானவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த படங்கள் ஊடகங்களில் வெளியானதையடுத்து சிலர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரணிலின் வீடு எரிப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களும் தலைமறைவாக உள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
போராட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 4106 சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி