மாவீரன் பண்டார வன்னியனின் 222வது ஞாபகார்த்த விழா

Tamils Mullaitivu Vavuniya Thurairajah Raviharan
By Sathangani Aug 25, 2025 11:11 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 222வது ஞாபகார்த்த விழா வன்னியின் பல்வேறு பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த முல்லைத்தீவு கோட்டை, அந்நியப் படையெடுப்புகளை எதிர்த்து வீரமுடன் போராடிய மாவீரன் பண்டாரவன்னியன் தலைமையிலான படைகளால் 1803 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 அன்று கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டு இரண்டு பீரங்கிகள் கைப்பற்றப்பட்டது.

இந்த நிகழ்வு இடம்பெற்று 222 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த விழா வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில்  நினைவுகூரப்பட்டது.

நீதிமன்றில் முன்னிலையாக முடியாத நிலையில் ரணில்! வைத்தியர்கள் கோரிக்கை

நீதிமன்றில் முன்னிலையாக முடியாத நிலையில் ரணில்! வைத்தியர்கள் கோரிக்கை

வவுனியா 

வவுனியா (Vavuniya) மாநகரசபை மற்றும் கலாசார பேரவையின் ஏற்ப்பாட்டில் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலையடியில் இன்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மாவீரன் பண்டார வன்னியனின் 222வது ஞாபகார்த்த விழா | 222Nd Commemoration Of The Hero Pandara Vanniyan

இதன்போது பண்டார வன்னியனின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பண்டாரவன்னியனின் நினைவுப்பேருரையினை சு.ஜெயச்சந்திரன் நிகழ்த்தியிருந்ததுடன் ஏனைய கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

மாநகர முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் பி.எ.சரத்சந்திர, மேலதிக அரச அதிபர், பிரதேச செயலாளர், உள்ளூராட்சி மன்ற உப தவிசாளர்கள், ஆணையாளர், மாநகரசபையின் உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள், பொது அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். 

மாவீரன் பண்டார வன்னியனின் 222வது ஞாபகார்த்த விழா | 222Nd Commemoration Of The Hero Pandara Vanniyan

முல்லைத்தீவு சுற்று வட்டம்

இதேவேளை முல்லைத்தீவு சுற்று வட்டத்தில் உள்ள சிலை வளாகத்தில் மாவீரன் பண்டார வன்னியனின் 222ஆம் ஆண்டு வெற்றிநாள் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

மாவீரன் பண்டார வன்னியனின் 222வது ஞாபகார்த்த விழா | 222Nd Commemoration Of The Hero Pandara Vanniyan

கரைதுறைப்பற்று பிரதேசசபையின் ஏற்பாட்டில் தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை செயலாளர் இராஜயோகினி ஜெயக்குமார், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் தொ.பவுள்ராஜ் யூட் பிரசாத், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ரணிலை படுகொலை செய்யுமாறு வெளியான பதிவால் சர்ச்சை!

ரணிலை படுகொலை செய்யுமாறு வெளியான பதிவால் சர்ச்சை!

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் 

அத்துடன் மாவீரன் பண்டார வன்னியன், முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றி வெற்றி பெற்ற 222 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

மாவீரன் பண்டார வன்னியனின் 222வது ஞாபகார்த்த விழா | 222Nd Commemoration Of The Hero Pandara Vanniyan

முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் தற்போது அழிவடைந்த நிலையில் காணப்படும் முல்லைத்தீவு கோட்டையின் அருகில் இன்றைய தினம் குறித்த பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) திரு.சி.குணபாலன் , மேலதிக மாவட்ட செயலாளர் ( காணி ) திரு.ஜெயகாந் , பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. சற்குணேஸ்வரன்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ஜி.ஜெயரஞ்சினி உட்பட மாவட்ட செயலக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டயானா கமகேவுக்கு பிணை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

டயானா கமகேவுக்கு பிணை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி