டயானா கமகேவுக்கு பிணை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு (Diana Gamage) பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் டயானா கமகே தனது வழக்கறிஞர்கள் மூலம் இன்று (25) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலையாகினார்.
இந்தநிலையில் அவரை 10 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் செல்ல கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏழு வழக்குகள் பதிவு
குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தை மீறி தவறான தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றதுடன், செல்லுபடியாகும் விசா அனுமதி இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்தமை உட்பட அவருக்கு எதிராக ஏழு வழக்குகள் பதிவு செய்யபப்ட்டிருந்தன.
டயானா கமகே மீது தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தகக்து.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

