கடத்தப்பட்ட 279 மாணவிகளும் பத்திரமாக மீட்பு -பெற்றோர் மகிழ்ச்சி
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் பாடசாலையொன்றிலிருந்து கடத்தப்பட்ட 279 மாணவிகளும் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. நைஜீரியாவில் மூன்று மாதங்களுக்குள் பாடசாலைகளிலிருந்து மாணவிகள் நான்கு முறை பாரியளவில் கடத்தப்பட்டது நாட்டை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் அரசாங்கத்திற்கு எதிராக பரவலான கோபத்தைத் தூண்டியது.
மற்றும் நாட்டின் கிழக்கு பகுதியான சிபோக்கில் நூற்றுக்கணக்கான மாணவிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு கடத்தப்பட்டதை நினைவுகூர்ந்தது. இது உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "சிறுமிகள் மீட்கப்பட்டதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று ஜம்பாரா மாநில ஆளுநர் டாக்டர் பெல்லோ மாதவல்லே பத்திரிகையாளரிடம் கூறினார். "
அவர்கள் இப்போது அரசாங்க தங்குமிடத்திற்கு வந்து நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்." என்று தெரிவித்தார்.
மாணவிகள் அனைவரும் மீட்கப்பட்டமையால் பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.