உலகின் முதல்தர விஞ்ஞானிகளில் 35 இலங்கையர் இடம்பிடிப்பு (பட்டியல் இணைப்பு)
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் எல்சேவியர் பப்ளிஷர்ஸ் இணைந்து நடத்திய சமீபத்திய தரவரிசையின்படி, உலகின் முதல் 2% விஞ்ஞானிகளில் இலங்கை விஞ்ஞானிகள் 35 பேர் இடம்பிடித்துள்ளனர்.
இந்த தரவரிசை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
இவ்வாறு மதிப்பிடப்பட்ட இலங்கை விஞ்ஞானிகளில் இலங்கை பேராசிரியர்களான மெத்திக விதானகே, ரணில் ஜயவர்தன, ஜனக ஏகநாயக்க, சேனக ராஜபக்ச, சரோஜ் ஜயசிங்க, மொஹான் முனசிங்க, எஸ்.ஏ.எம்.குலரத்ன ஆகியோர் அடங்குவர்.
தொடர்ந்து மூன்றாவது தடவை
ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் மருந்தியல் விஞ்ஞானப் பேராசிரியராகப் பணியாற்றிய அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
இப்பட்டியலில் உள்ளடங்கியுள்ள இலங்கை விஞ்ஞானிகளில் பெரும்பாலானவர்கள் மருத்துவத்துறை தொடர்பான கல்விமான்கள் ஆவர்.

