ரஷ்யாவிற்கு பேரிழப்பு : தாக்கி அழிக்கப்பட்டது T-90 டாங்கி (காணொளி)
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Sumithiran
லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் நடந்த சண்டையில் ரஷ்யாவின் மிகவும் திறன்வாய்ந்த டாங்கிகளில் ஒன்று அழிக்கப்பட்டது.
நான்கு நாட்களில் உக்ரைனால் அழிக்கப்பட்ட 25 எதிரி டாங்கிகளில் இதுவும் ஒன்று என்று உக்ரைனிய தரைப்படைகளின் தளபதி கேணல் ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி கூறினார்.
கிரெம்ளினுக்கு ஏற்பட்டுள்ள சங்கடம்
லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மகியிவ்கா மற்றும் ப்ளோஷ்சங்கா கிராமங்களுக்கு இடையே உள்ள சாலையில் T-90 டாங்கி அழிக்கப்பட்டதைக் காட்டும் காட்சிகளை அவர் வெளியிட்டார்.
T-90 இன் இழப்பு கிரெம்ளினுக்கு ஒரு சங்கடமாக பார்க்கப்படலாம், ஏனெனில் ஒவ்வொரு யூனிட்டும் சுமார் £4 மில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது.
லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மகியிவ்கா மற்றும் ப்ளோஷ்சங்கா கிராமங்களுக்கு இடையிலான சாலையில் இந்த டாங்கி அழிக்கப்பட்டது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி