நீர்கொழும்பில் துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது
நீர்கொழும்பு பகுதியில் வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த நான்கு சந்தேகநபர்கள் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து T-56 ரைபிள், 2 கைத்துப்பாக்கிகள், 19 ரவைகள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கப்பம் கோரும் கும்பலிடம் சரணடைய மறுத்ததால், தொழிலதிபரை கொலை செய்ய குழுவொன்று சதித் திட்டம் தீட்டி வருவதாகத் தகவல் கிடைத்ததாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கொடுவேகொட மற்றும் மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.