இலங்கை அணியை துரத்தும் காயம் - மற்றுமொரு வீரரும் வெளியேற்றம்
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்கு மற்றுமொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதன்படி மற்றுமொரு வீரர் காயம் காரணமாக போட்டித் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
ஏற்கனவே மூவர்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா காயமடைந்தவர்கள் பட்டியலில் இணைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே காயம் காரணமாக லகிரு குமாரா, துஷ்மந்த சமீரா மற்றும் வனிந்து ஹசரங்கா போன்ற வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் தில்ஷன் மதுஷங்காவும் இணைந்துள்ளார்.
பெரும் பின்னடைவு

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அவர் ஆசியக் கோப்பையிலிருந்து விலகியுள்ளார். உலகக் கோப்பை தொடரில் இடம்பெறுவாரா என்பது குறித்து உறுதியாக கூற முடியாது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை அணியின் காயமடைந்த வீரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய கிண்ண தொடர் நாளை மறுதினம் முதல் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.