240 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து - 5 பேர் உயிரிழப்பு..! கிறிஸ்துமஸில் இடம் பெற்ற சோகம்
கிறிஸ்துமஸ் அன்று மத்திய கலாசியாவில் உள்ள மான்டெரோசோவில் சிறையில் இருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்க பலர் பேருந்து ஒன்றில் பயணித்துள்ளனர்.
குறித்த பேருந்து வடமேற்கு ஸ்பெயினின் கலீசியா பகுதியில் இரவு வேளையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென 240 அடி பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 5 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேதமடைந்த பாதுகாப்பு தண்டவாளம்
பேருந்தில் இருந்து இரண்டு சடலங்கள் அகற்றப்பட்டதாகவும், மேலும் இருவர் (ஓட்டுநர் உட்பட) மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் மேலும் மூன்று உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து செய்தித்தொடர்பாளர் கூறுகையில், செங்குத்தான சாய்வு கொண்ட இடத்தில் இந்த பயங்கரமான விபத்து நடந்தது. ஓட்டுநர் மது அருந்தவில்லை என தெரிவித்தார்.
இதற்கிடையில் பாலத்தின் மீது ஒரு பாதுகாப்பு தண்டவாளம் சேதமடைந்ததை கவனித்த ஒரு வாகன ஓட்டி முதலில் எச்சரிக்கை எழுப்பியதாகவும், மீட்புப் படையினருக்கு பேருந்தில் இருந்து அழைப்பு வந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. ஆனால் மோசமான வானிலை காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
