35 இந்தியர்கள் உட்பட 54 வெளிநாட்டவர்கள் அதிரடி கைது! விசாரணைகள் தீவிரம்
கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், ஹிக்கடுவவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் 54 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இன்று(11) விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ல் 35 இந்திய பிரஜைகளும் 19 நேபாள பிரஜைகளும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல்
கணினி குற்றங்களில் ஈடுபடுவதற்காக, ஹிக்கடுவவின் தொடந்துவ பகுதியில் ஒரு வெளிநாட்டினர் குழு தங்கியிருப்பதாக பூஸ்ஸ இராணுவ முகாமில் உள்ள புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

Image Credit: South China Morning Post
அதன்படி, விசேட அதிரடிப்படையின் தென் மாகாண சிறப்பு அதிரடிப் பிரிவும், ஹிக்கடுவ காவல்துறையும் இணைந்து இன்று பிற்பகல் ஒரு சிறப்பு சுற்றிவளைப்பை மேற்கொண்ட போதே சந்தேகநபர்கள் மேற்கண்டவாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
அதனைதொடர்ந்து, அவர்களிடமிருந்து சுமார் இருநூறு கைபேசிகள் மற்றும் 25 மடிக்கணினிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர்கள் குறித்த மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ காவல்துறையினரும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |