வறட்சியான காலநிலையால் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு
Sri Lanka
Climate Change
By Beulah
இன்று முழு இலங்கையுமே காலநிலை மாற்றத்தினால் பல்வேறுப்பட்ட அசெகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமையினை அவதானிக்க கூடியதாக உள்ளது.
நிலவுகின்ற வறட்சியான காலநிலையால் சிறுபோகத்தில் 63 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் அழிவடைந்துள்ளதாக, விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான அறிக்கை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் விவசாய அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சபையின் தலைவர் எம்.பி. வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள்
அத்துடன், வறட்சியான காலநிலையினால் 64 ஆயிரத்து 342 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சபையினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
