அநுரவின் கொக்குவில் நிகழ்வுக்கு 70 பேருந்துகள்! சேஞ்ஜ் ஆகாத சிஸ்ரம்....
தமிழ்சமூக வலைத்தளப்பரப்பில் செல்வாக்கு செலுத்தும் வாஞ்சிப்பு முகங்களைப்பொறுத்தவரை (இன்புளுவன்ஸ்காரர்கள்) சிறிலங்காவின் தற்போதைய அரசதலைவர் அநுரவை ஒரு வாராது வந்த மாமனித தலைவர் என்ற நிலையை எப்படியாவது புலம்பெயர் தமிழர்களின் தளத்திலும் உள்ளூர் தளத்திலும் நுளுந்தச் செய்யவேண்டும் என்ற ஆவல் இருக்கத்தான் செய்கிறது.
இதற்காக அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய யாழ்ப்பாணப் பயணத்தில் தென்பட்ட காட்சிகளையெல்லாம் அவர்கள் தமக்கு சாதகமாக்கத் தலைப்பட்ட அநுர மேனியா செய்திகளாக்கிக் கொண்டார்கள். ஆனால் அவர்களின் இந்த அநுர மேனியா செய்திகளை சில உண்மை செய்திகள் கையோடு கம்மாரிசு என்ற வகையில் அம்பலப்படுத்தி விட்டன.
அந்த வகையில் அநுரவின் கொக்குவில் நிகழ்வுக்கு ஆட்களை ஏற்றி இறக்க மக்களின் அன்றாட பயணத்துக்கான பொதுப்போக்குவரத்து சேவை பேருந்துகளின் 70 பேருந்துகள் எடுக்கப்பட்ட விடயம் சேஞ்ஜ் ஆகாத சிஸ்ரமாக வந்தது.
முன்னைய அதிகார மையங்களும் இவ்வாறுதான் பொதுப்போக்குவரத்து பேருந்துகளை பயன்படுத்தி தமது கூட்டங்களுக்கு ஆட்களை இழுத்துப்பறிக்கும் சிஸ்ரத்தை கடைப்பிடித்துக்கொண்டார்கள்.
அப்படியானால் பொதுப்போக்குவரத்து சேவையில் இருந்து 70 பேருந்துகள் எடுக்கப்பட்டு ஆட்கள் ஏற்றிஇறக்கப்பட்ட கூட்டம் அநுரவுக்கு தானாக சேர்ந்த இயல்பான கூட்டம் என அநுர மேனியா இன்புளுவன்ஸர்கள் சொல்வதன் உண்மையான மறுபக்கம் என்ன..
இதேபோல அநுர தனது யாழ் பயணத்தில் தையிட்டி விகாரை பிரச்சினையில் நயினாதீவு விகாராதிபதிக்கு உள்ள தெளிவைகூட வெளிப்படுத்த தவறியதன் மறுபக்கம் தான் என்ன...
இவ்வாறான வினாக்களின் பின்னணியில் வருகிறது இன்றைய செய்திவீச்சு......
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |