அரசு மருத்துவமனையொன்றில் திறக்கப்பட்ட நவீன சமையலறை
வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலாயத்தின் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் உதவியுடன் மஹரகம அபேக்சா மருத்துவமனையில் கட்டப்பட்ட புதிய சமையலறை இன்று(06) திறந்து வைக்கப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சத்தான உணவை வழங்குவதற்காக அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட முதல் நவீன சமையலறை இதுவாகும்.
முழு திட்டத்திற்குமான செலவு
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முழு திட்டத்திற்கும் ரூ. 40 மில்லியன் செலவாகும். மேலும் இலங்கை இராணுவத்தின் உழைப்புபும் கிடைத்துள்ளது.

திறப்பு விழாவில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே தனராச்சிகே திலின மதுசங்க அபேரத்ன, கதிர்காம மகா தேவாலயத்தின் முன்னாள் பஸ்நாயக்க நிலமே திஷான் விக்ரமரத்ன குணசேகர, மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் அருண ஜயதிஸ்ஸ மற்றும் பிற மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
images -ada
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

