அறிமுகமான சான்டா கிளாஸுன் புதிய முகவரி..! - பிரிட்டன் மக்கள் கடிதம் எழுத வாய்ப்பு
பிரிட்டன் மக்கள் சான்டா கிளாஸுக்கு கடிதம் எழுத அந்நாட்டு அரசு வசதி செய்து கொடுத்துள்ளது.
சான்டா கிளாஸ், சான்டாஸ் க்ரொட்டோ, ரெயின் டீர் லேண்ட், XM4 5HQ என்ற முகவரிக்கு கடிதம் எழுத அந்நாட்டு அரசு வசதி செய்து கொடுத்துள்ளது.
சான்டா கிளாஸின் தொழிற்சாலையில் ஆண்டு முழுவதும் 'எல்வ்ஸ்' எனப்படும் பணியாளர்களால் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் தயாரிக்கப்படுகின்றன.
இங்கிலாந்தில் சான்டா கிளாஸ்
உலகம் முழுதும் சான்டா கிளாஸுக்கு பற்பல பெயர்கள் உண்டு. இங்கிலாந்தில் சான்டா கிளாஸ், ஃபாதர் கிறிஸ்துமஸ் என அழைக்கப்படுகிறார்.
அமெரிக்காவில் கிரிஸ் கிரிங்கில் எனவும், ஜெர்மனியில் வெய்னச்மன் (கிறிஸ்துமஸ் மனிதர்) எனவும் அழைக்கப்படுகிறார்.
சாந்தமான முகத்துடன் மகிழ்ச்சியாகக் காட்சியளிக்கும் சான்டா கிளாஸ், எப்போதும் அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்த சத்தமாக சிரிப்பது வழக்கம்.
ஸ்லே வண்டி
உலகில் உள்ள 250 கோடி குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவு, சான்டா கிளாஸ் அவர்களது படுக்கையறையில் பரிசுப் பொருட்களை ரகசியமாக வைத்துவிட்டுச் செல்வதாக கிறிஸ்தவ குழந்தைகள் கதைகள் கூறுகின்றன.
இதற்காக மான்கள் இழுத்துச் செல்லும் 'ஸ்லே' என்கிற பறக்கும் வண்டியில் சான்டா கிளாஸ் பரிசுப் பொருட்களுடன் பறந்து செல்வார். இந்த ஸ்லே வண்டி மணிக்கு 1,800 மைல் வேகத்தில் பயணிப்பதாகவும் இதுவே உலகின் வேகமான ஊர்தி எனவும் வேடிக்கையாகக் கூறப்படுகிறது.
சான்டா கிளாஸ் பயணிக்கும் ஸ்லேவை டஷெர், டான்ஸர், ஃபான்ஸர், விக்ஸின், காமெட், குபிட், டொன்னர். ப்ளிட்சென், ருடால்ஃப் என்கிற ஒன்பது மான்கள் இழுத்துச் செல்கின்றன.
பைலட் ஓட்டுனர் உரிமம்
சான்டா கிளாஸ் என்னும் கற்பனை கதாபாத்திரத்துக்கு அமெரிக்க அரசு கடந்த 1927 ஆம் ஆண்டு விமான பைலட் ஓட்டுனர் உரிமம் அளித்துள்ளது.
சான்டா கிளாஸுக்கு மிஸஸ் கிளாஸ் என்னும் கவர்ச்சிகரமான மனைவி உண்டாம்..! கிறிஸ்துமஸ் தினத்தன்று அனைத்து பணிகளும் முறையாக நடைபெறுகின்றனவா எனப் பரிசோதிப்பது மிஸஸ் கிளாஸின் பணி.
கனடாவைச் சேர்ந்த சான்டாவின் ரசிகர் கிரிஸ் அலெக்ஸாண்டர். இவர் கனடா நாடாளுமன்றத்தின் அமைச்சர்களுள் ஒருவராவார். இவர் சான்டா கிளாஸுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு கனடாவுக்குள் நுழைய பாஸ்போர்ட் வழங்கினார்.
சான்டா கிளாஸ் தனது மனையுடன் வட துருவத்திலோ அல்லது பின்லாந்து நாட்டிலோ வசிப்பதாக நம்பப்படுகிறது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
