பங்களாதேஷில் பாரிய வெடிப்பு சம்பவம் - பலர் பலி
Bangladesh
Bomb Blast
By Sumithiran
பங்காளதேஷ் நாட்டின் தலைநகர் டாக்காவில் 7 மாடி கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 14 பேர் பலியாகினர்.
இந்த விபத்தில், கட்டடத்தில் இருந்த பலரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும், பலர் அங்கிருந்து வெளியேறினர்.
இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்
இந்த விபத்தில், 14 பேர் பலியானதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்