ஏ-9 பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட கரடி உயிரிழப்பு
Kilinochchi
Death
By Dharu
கிளிநொச்சி, முறுகண்டி சந்தியில் வீதியைக் கடக்க முற்பட்ட கரடி ஒன்று வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி வனஜீவராசிகள் உத்தியோகத்தர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்திக்கு அருகில் ஏ-9 பிரதான வீதியின் இருபுறமும் அமைந்துள்ள காப்புக்காட்டில் இருந்து வீதியைக் கடக்க முற்பட்ட கரடி, அதிவேகமாக வந்த வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் கரடியுடன் மோதிய வாகனம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் கரடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணை

உயிரிழந்த கரடி சுமார் 5 அடி உயரம் கொண்டுள்ளதாகவும், வடமாகாண வனவிலங்கு கால்நடை வைத்தியர் பா.கிரிதரன் தலைமையில் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் கிளிநொச்சி வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி