பிரதமர் மோடியின் விமானத்திலிருந்து கசிந்த முக்கிய காணொளி
இலங்கையிலிருந்து (Sri Lanka) திரும்பும் வழியில், ராமநவமி நாளில் ராமர் சேதுவை தரிசனம் செய்யும் பாக்கியமும், சூரிய திலகத்தை தரிசனம் செய்யும் பாக்கியமும் கிடைத்தது.” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi).
பாம்பனில் அமைந்துள்ள பழைய ரயில் பாலம் பழுதடைந்ததைத் தொடர்ந்து புதிய ரயில் தூக்குப் பாலம் கட்டப்பட்டது.
இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அனுராதபுரத்திலிருந்து நேற்று காலை இந்திய விமானப் படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்தி மூலம் இந்தியாவை சென்றடைந்தார்.
இது தொடர்பில் மோடி பதிவிட்டுள்ள அந்தப் பதிவில் “இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமநவமி நாளில் ராமர் சேதுவை தரிசனம் செய்யும் பாக்கியமும், ராம்லாலாவின் சூரிய திலகத்தை தரிசனம் செய்யும் பாக்கியமும் ஒருசேர கிடைத்தது. பகவான் ஸ்ரீராமரின் அருள் நம் அனைவர் மீதும் நிலைத்திருக்க பிரார்த்திக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த பயணத்தின் போது இலங்கை - இந்திய கடற்பரப்புக்கு இடையில் உள்ள பல தீவுகளை கண்கானித்த ஒரு காணொளியையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.
மோடியின் இலங்கை விஜயம் பரஸ்பர இருதரப்பு விஜயமாக பார்க்கப்பட்டாலும் இதன் பின்னணி தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் மோடியின் உலங்கு வானூர்தி பயணத்தில் வெளியாகிய காணொளியின் பின்புலம் தொடர்பில் ஆராய்கிறது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
